திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 23 செப்டம்பர் 2024 (09:04 IST)

அதிகமுறை ஐந்து விக்கெட்கள்… ஷேன் வார்ன் சாதனையை சமன் செய்த அஸ்வின் !

இந்தியா - வங்கதேசம் இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியுள்ளது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்தியாவின் முன்னனி பேட்ஸ்மேன்கள் எதிர்பாராத விதமாக விக்கெட்டை இழந்து இந்திய அணி தடுமாறியபோது பேட்டிங்கில் சதமடித்தும், இரண்டாவது இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்களைக் கைப்பற்றியும்  அசத்தினார்.

இதன் மூலம் இந்த போட்டியின் ஆட்டநாயகனாக அவர் அறிவிக்கப்பட்டார். இந்த போட்டியில் அவர் ஷேன் வார்னின் முக்கியமான சாதனையை சமன் செய்துள்ளார். அவர் ஒரு இன்னிங்ஸில் அவர் 37 முறை ஐந்து விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் ஆஸ்திரேலிய ஜாம்பவான் வீரர் ஷேன் வார்னின் சாதனையையும்  சமன் செய்துள்ளார்.

இந்தியாவுக்காக அதிக விக்கெட்களை வீழ்த்திய இரண்டாவது வீரராக (522 விக்கெட்கள்) கும்ப்ளேவுக்குப் பிறகு  இடம்பிடித்துள்ளார். அவர் டெஸ்ட் போட்டிகளில் 6 சதம் அடித்து தோனியின் டெஸ்ட் இன்னிங்ஸ் சதங்களின் எண்ணிக்கையையும் சமன் செய்துள்ளார்.