செவ்வாய், 12 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 23 செப்டம்பர் 2024 (10:40 IST)

24000 நடன அசைவுகள்.. கின்னஸ் சாதனை படைத்த சிரஞ்சீவி!

தெலுங்கு சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவி மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்த போது அரசியலுக்கு சென்றார். ஆனால் அவரால் பெரியளவில் அரசியலில் சாதிக்கமுடியவில்லை. இந்நிலையில் திரும்பவும் சினிமாவுக்கு வந்து நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அவர் நடிப்பவை பெரும்பாலும் ரீமேக் படங்களாகவே அமைந்துள்ளன.

சமீபத்தில் அவர் நடிப்பில் போலா ஷங்கர் என்ற திரைப்படம் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களையும் மோசமான விமர்சனங்களையும் பெற்றது. இந்த படம் அஜித் நடித்த வேதாளம் படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ரீமேக்கில் பல மாற்றங்களை செய்ததால் படம் ரசிகர்களை திருப்திப் படுத்தவில்லை. இப்போது அவர் சில படங்களில் நடித்துவரும் நிலையில் அவருக்குக் கின்னஸ் சாதனை வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை சிரஞ்சீவி 156 படங்களில் நடித்துள்ளார். இதில் அவர் 537 பாடல்களில் நடனமாடி, 24000 நடன ஸ்டெப்களை போட்டுள்ளார். இதை அவர் 45 வருடங்களில் செய்துள்ளார். இதற்காக அவருக்கு அதிக நடன அசைவுகள் செய்த நடிகர் என்ற கின்னஸ் சாதனை வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை அவருக்கு பாலிவுட் நடிகர் அமீர்கான் வழங்கினார்.