ஸ்டார்க்கை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் … ரசிகரின் கேள்விக்கு அஸ்வின் பதில்!

Last Updated: வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (11:31 IST)

மன்கட் முறையில் அவுட் செய்வது குறித்து பல சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் அதுகுறித்து ரசிகர் ஒருவருக்கு பதிலளித்துள்ளார் அஸ்வின்.

கடந்த ஆண்டு நடந்த 12 ஆவது ஐபிஎல் போட்டி தொடரின் போது ஜோஸ் பட்லரை அஸ்வின் மன்கட் முறையில் அவுட் ஆக்கியது கூறப்படுகிறது. மன்கட் முறையில் பேட்ஸ்மேனை எச்சரிக்காமல் முதல் முறையே அவுட் ஆக்கியது ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது. அந்த சர்ச்சை ஓராண்டைக் கடந்தும் இன்றும் பேசப்பட்டு வருகிறது.

சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியா இங்கிலாந்து தொடரில் ஸ்டார்க் பந்துவீசும் போது அதில் ரஷீத் கிரீஸை விட்டு வெளியே சென்றதால் ஸ்டார்க் எச்ச்சரித்தார். இதைப் பார்த்த ரசிகர் ‘கற்றுக்கொள்ளுங்கள் அஸ்வின்’ எனக் கூறி அஸ்வினை டேக் செய்தார்.

அந்த ரசிகருக்கு பதிலளித்துள்ள அஸ்வின் ‘எனக்கு நேர்மையாக சண்டையிடுவது பிடிக்கும். ஆனால் ஒருநாள் காத்திருங்கள். நான் இது குறித்து உங்களிடம் பேசுகிறேன். எனக்கென ஒரு நாள் ஓய்வு கொடுத்துக் கொள்கிறேன்.’ எனக் கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :