1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (10:23 IST)

இதெல்லாம் செய்யக்கூடாது… ஐபிஎல் விளையாடும் வீரர்களுக்கு பிசிசிஐ விதிமுறைகள்!

ஐபிஎல் போட்டிகள் நாளை தொடங்க உள்ள நிலையில் வீரர்களுக்காக நெறிமுறைகளை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா லாக்டவுனால் ஒத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் டி20 போட்டிகள் அமீரகத்தில் நடைபெற உள்ளது. இதற்காக ஐபிஎல் அணிகள் ஏற்கனவே அரபு அமீரகம் சென்றடைந்துள்ளன. அங்கு வீரர்கள் கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க, வீரர்கள் அனைவரும் 6 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக இந்த முறை ஐபிஎல் தொடர் முழுவதும் ஆளில்லாத காலியான மைதானத்தில் நடக்க உள்ளன.

இந்நிலையில் நாளை முதல் தொடங்க உள்ள போட்டிகளில் வீரர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன என்பது வெளியாகியுள்ளது.
அவையாவன-
  • டாஸ் போடும் போது கேப்டன்கள் கைகுலுக்கக்கூடாது. அதேபோல ஆட்டம் முடிந்த பிறகு வீரர்கள் கைகுலுக்குவதை தவிர்க்கவேண்டும். 
  • அணியில் இல்லாத வீரர்கள் பயிற்சியாளர்கள் இடைவெளிவிட்டு அமர்ந்திருக்க வேண்டும்.
  • தண்ணீர், குளிர்பானங்கள் எடுத்து வரும் வீரர்கள் கையை கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும்.
  • டவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் 
எனப் பல விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.