1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (10:13 IST)

முன்னாள் சி எஸ் கே வீரருக்கு கொரோனா… மனைவிக்கும் பாதிப்பு!

சி எஸ் கே அணிக்காக 2018 ஆம் ஆண்டு விளையாடிய இங்கிலாந்தின் டேவிட் வில்லிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் தானும் தன் மனைவியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார். இவர் உள்ளூர் டி 20 தொடர் ஒன்றில் தற்போது  யார்க்ஷயர் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் இவருடன் சேர்ந்து மாத்யூ பிஷர், டாம் கோஹ்லர், ஜோஷ் பாய்ஸ்டன் ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் வில்லியின் மனைவிக்கும் கொரோனா பாதித்துள்ளது. டேவிட் வில்லி 2018 ஆம் ஆண்டு சென்னை அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.