தொடர்புடைய செய்திகள்
- சென்னையில் கல்லூரி மாணவி தூக்கில் தொங்கி தற்கொலை: அதிர்ச்சி காரணம்!
- இந்தியாவில் ஒரே நாளில் 96 ஆயிரம் பேர் பாதிப்பு, 1,175 பேர் மரணம்: கொரோனா குறித்த அதிர்ச்சி தகவல்
- 3.03 கோடி பேர் பாதிப்பு, 2.20 கோடி பேர் குணமடைந்தனர், 9.5 லட்சம் பேர் மரணம்: உலக கொரோனா நிலவரம்
- 80 களின் சூப்பர் ஸ்டாருக்கு கொரொனா தொற்று...ரசிகர்கள், திரை நட்சத்திரங்கள் அதிர்ச்சி
- தமிழ்நாட்டில் இன்று 5,560 பேருக்கு கொரோனா உறுதி… ஒரே நாளில் 59 பேர் பலி
நாள் முழுவதும் வீடியோகேம்… பெற்றோர் கண்டித்ததால் மாணவி எடுத்த் அதிர்ச்சி முடிவு!
சென்னையில் வீடியோகேம் விளையாடுவது குறித்து பெற்றோர் எச்சரித்ததால் மாணவி தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அம்பத்தூர், வரதராஜபுரம் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் என்பவரின் மகள் பத்மாவதி. இவர் அண்ணாநகரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு பி காம் படித்து வந்துள்ளார். இவர் செல்போனில் எப்போதும் வீடியோ கேம் போன்றவற்றை விளையாடுவதில் மிகுந்த ஆர்வமாக இருந்துள்ளார்.
இதனால் மாணவியின் பெற்றொர் அவரைக் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த மாணவி வீட்டில் பெற்றோர் இல்லாத நேரத்தில் தூக்குமாட்டி கொண்டுள்ளார். இதைப் பார்த்த பெற்றோர் அதிர்ச்சியாகி அவரை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் .ஆனால் அதற்குள்ளாகவே பத்மாவதியின் உயிர் பலியாகி விட்டது. இந்த தற்கொலை குறித்து போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
