ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: சனி, 4 மே 2024 (07:10 IST)

மீண்டும் டாஸை ஏமாற்றியதா மும்பை இந்தியன்ஸ்?… கிளம்பியது அடுத்த சர்ச்சை!

கடந்த ஏப்ரல் 11ம் தேதி மும்பை இந்தியன்ஸ் – ஆர்சிபி அணிகள் இடையே போட்டி நடந்தபோது, மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா டாஸ் போட்டார். அவர் ஒரு மார்க்கமாக டாஸை பின்னால் போட அதை எடுத்த ஜவகல் ஸ்ரீநாத் மும்பைக்கு சாதகமாக டாஸ் வரும்படி டாஸ் காயினை திருப்பி எடுத்ததாக ஒரு வீடியோவும் வைரலானது. இது சம்மந்தமான வீடியோ வைரலாகி சர்ச்சைக் கிளம்பியது.

மும்பை இந்தியன்ஸ் அணியினர் ரெப்ரியை விலைக்கு வாங்கி ஏமாற்று வேலையில் ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து டாஸ் போடும் போது டாஸ் காயினுக்கு நேரடியாக கேமரா க்ளோஸ் அப் வைக்கப்பட்டு டாஸின் முடிவு ரசிகர்களுக்கு தெரியும்படி காட்டப்பட்டது. அந்த சர்ச்சைக்குப் பிறகு அனைத்துப் போட்டிகளும் அவ்வாறு காட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று மும்பை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியில் அதுபோல காட்டாமல் நேரடியாக ஹர்திக் பாண்ட்யா டாஸ் ஜெயித்ததாக ரெப்ரி அறிவித்தார். இதனால் மீண்டும் டாஸில் மும்பை இந்தியன்ஸ் அணி ஏமாற்று வேலையில் ஈடுபடுவதாக ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கொந்தளித்து வருகின்றனர்.