சாம்பியன்ஸ் கோப்பை தொடர்… மீண்டும் தொடங்கிய சர்ச்சை!
கோப்பைத் தொடரில் இந்தியா நேற்று முன் தினம் தங்கள் முதல் போட்டியில் பங்களாதேஷ் அணியை எளிதாக வீழ்த்தி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியை தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் போது சாம்பியன்ஸ் கோப்பை தொடரை நடத்தும் பாகிஸ்தானின் பெயர் இல்லாமல் ஒளிபரப்பப்பட்டுள்ளது. ஆனால் மற்ற போட்டிகளில் பாகிஸ்தானின் பெயர் இடம் பெற்றுள்ளது. இதையடுத்து தற்போது கண்டங்கள் எழுந்த நிலையில் இது தொழில் நுட்பக் கோளாறால் ஏற்பட்ட தவறுதான் என்றும் அடுத்த போட்டியில் இருந்து பாகிஸ்தானின் பெயர் கண்டிப்பாக இடம்பெறும்” என்றும் ஐசிசி விளக்கமளித்தது.
இந்த தொடர் அறிவிக்கப்பட்டதில் இருந்தே இந்திய கிரிக்கெட் வாரியத்தால் பல சர்ச்சைகள் எழுந்தன. பாகிஸ்தான் சென்று விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் அரசியல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக மறுத்தது. முதலில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பின்னர் பிசிசிஐ மற்றும் ஐசிசி கொடுத்த நெருக்குதால் ஹைபிரிட் மாடலில் நடத்த ஒத்துக் கொண்டது. அதனால் இந்தியா அணி விளையாடும் போட்டிகள் துபாயில் நடத்தப்படுகின்றன.
அதே போல கேப்டன்களுக்கான புகைப்படம் எடுக்கும் நிகழ்விலும் ரோஹித் ஷர்மாவைக் கலந்துகொள்ள பாகிஸ்தான் அனுப்பவில்லை. இதனால் அந்த நிகழவே ரத்து செய்யப்பட்டது.