அதிகாரத்தை அடைய வேண்டுமென்றால் ஆங்கிலம் முக்கியம்.. ராகுல் காந்தி அறிவுரை..!
"ஆங்கிலத்தில் பேச மாட்டேன்" என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறிவரும் நிலையில், ஒருவர் அதிகாரத்தை அடைய வேண்டுமென்றால் ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. திரு ராகுல் காந்தி,தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தின் ரேபரேலி பகுதியில் மாணவர்களுடன் உரையாடிய ராகுல் காந்தி "அதிகாரத்தை அடைய ஆங்கிலம் ஒரு கருவி. அது மக்களின் மிகப்பெரிய ஆயுதம்" என்றும் கூறினார்.
மோகன் பகவத் ஆங்கிலத்தில் பேச மாட்டேன்" என்று கூறுவதாகவும், பட்டியலின, பழங்குடியின மற்றும் ஏழை மக்கள் உயர்ந்த நிலைக்கு வரக்கூடாது என்பதற்காகவே ஆர்எஸ்எஸ் ஆங்கிலம் கற்கக் கூடாது என கூறுவதாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
ஆனால், "ஆங்கிலம் கற்றுக் கொண்டால் தான் உலகம் முழுவதும் சென்று எந்த ஒரு நிறுவனத்தில் பணி புரியலாம். எனவே, ஆங்கிலம் அனைவருக்கும் மிகவும் அவசியம்" எனவும் அவர் தெரிவித்தார்.
ராகுல் காந்தியின் இந்தக் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva