வெள்ளி, 21 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 21 பிப்ரவரி 2025 (09:42 IST)

இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை விரும்பிய பைடன் அரசு.. டிரம்ப் தகவலால் பாஜக ஆவேசம்..!

இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை அமெரிக்காவின் முந்தைய பைடன் அரசு விரும்பியதாகவும், அதனால் தான் இந்தியாவில் வாக்கு சதவிகிதம் அதிகரிக்க அமெரிக்க அரசு நிதி உதவி வழங்கி இருப்பதாக கருதுகிறேன் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் கூறிய கருத்தை அடுத்து, ராகுல் காந்தி மீது பாஜக கடும் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறது.

இது குறித்து பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் கூறிய போது, 2024 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க வெளிநாட்டு சக்திகள் முயற்சி செய்வதாக ஏற்கனவே பிரதமர் மோடி குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். அந்த குற்றச்சாட்டு இப்போது டிரம்ப் கருத்தின் மூலம் உறுதியாகி உள்ளது.

மோடியை பதவியில் இருந்து தூக்கி விட்டு, வேறு ஒருவரை பதவியில் அமர்த்த முந்தைய அமெரிக்க பைடன் அரசு திட்டமிட்டுள்ளதை தற்போது அதிபர் டிரம்ப் உறுதி செய்துள்ளார். இதன் மூலம் பிரதமர் மோடியின் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு, ராகுல் காந்தி லண்டன் பயணம் மேற்கொண்டார். அப்போது தான் அவர் வெளிநாட்டு சக்திகள் உடன் தொடர்பு கொண்டு, இந்தியாவின் உள்நாட்டு விஷயங்களில் தலையிடுமாறு வலியுறுத்தியுள்ளார் என பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் கூறியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva