1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Anjinkye rahane may make way to virat kohli

கோலிக்கு வழிவிடப் போவது யார்? இரண்டாவது டெஸ்ட் எதிர்பார்ப்பு!

ரஹானே
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் நிகழப்போகும் மாற்றம் குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்திய அணியின் கேப்டன் கோலி முதல் டெஸ்ட்டில் ஓய்வில் இருக்கிறார். இதனால் அறிமுகமான ஸ்ரேயாஸ் ஐயர் 170 ரன்களை சேர்த்து தனது தேர்வு சரிதான் என நம்பவைத்துள்ளார். இந்நிலையில் அடுத்த போட்டியில் கோலி வரும் போது அவருக்கு வழிவிடப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாகவே மோசமான பார்மில் இருக்கும் துணைக் கேப்டன் ரஹானேதான் வழிவிட வேண்டி இருக்கும் என பல முன்னாள் வீரர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒருவேளை ஸ்ரேயாஸ் ஐயர் தொடர்ந்து சிறப்பாக விளையாடும் பட்சத்தில் கான்பூர் டெஸ்ட் போட்டியே ரஹானேவின் கடைசி போட்டியாக இருக்கக் கூட வாய்ப்புள்ளது.