திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 26 நவம்பர் 2021 (16:50 IST)

இது ஆரம்பம்தான்… ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாழ்த்து சொன்ன ரிக்கி பாண்டிங்!

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனும் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் பயிற்சியாளருமான ரிக்கி பாண்டிங் அறிமுக போட்டியில் சதமடித்த ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நியுசிலாந்து அணிக்கு எதிரான கான்பூர் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ஸ்ரேயாஸ் ஐயர் தனது முதல் போட்டியிலேயே சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை நிகழ்த்தும் 16 ஆவது இந்திய வீரராக பட்டியலில் இணைந்துள்ளார்.  சதமடித்த அவர் 105 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய டெஸ்ட் அணியின் நடுவரிசை ரஹானேவின் மோசமான ஃபார்மால் ஆட்டம் கண்டுள்ள நிலையில் தனது வாய்ப்பை நியாயப்படுத்தி அணியில் வலுவான அஸ்திவாரத்தை அமைத்துள்ளார் ஸ்ரேயாஸ்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளருமான ரிக்கி பாண்டிங் ஸ்ரேயாஸ் ஐயரை வாழ்த்தும் பொருட்டு ‘சிறப்பான கேரியருக்கான தொடக்கம்’ எனக் கூறியுள்ளார்.