1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Amith mishra announced Retirement

அனைத்து விதமானப் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்த அமித் மிஸ்ரா!

அமித் மிஸ்ரா
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களில் முன்னணி இடத்தை நகர்ந்துகொண்டிருந்த அமித் மிஸ்ரா ஒரு கட்டத்தில் தனக்கான வாய்ப்பை இழந்தார். கடைசியாக 2017 ஆம் ஆண்டு அவர் இந்திய அணிக்காக விளையாடியதுதான் கடைசி. அதன் பின்னர் ஐபிஎல் மற்றும் ராஞ்சி போன்ற உள்ளூர் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார்.

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் முன்னணியில் இருந்த அவர் கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் ஏலத்திலும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் அனைத்து விதமானப் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுவரை இந்திய அணிக்காக 22 டெஸ்ட் போட்டிகள், 36 ஒருநாள் போட்டிகள் மற்றும் 10 டி 20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
About Writer
vinoth