செவ்வாய், 20 ஜனவரி 2026
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 4 செப்டம்பர் 2025 (13:05 IST)

தோனியின் அந்த குணம் என்னைப் பிரமிக்கவைக்கிறது… குட்டி ABD கருத்து!

தோனியின் அந்த குணம் என்னைப் பிரமிக்கவைக்கிறது… குட்டி ABD கருத்து!
இந்தியக் கிரிக்கெட்டில் தோனி படைக்காத சாதனைகளை விரல்களை விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவுக்கு சிறப்பான சாதனைகளை அவர் படைத்துள்ளார். இந்தியாவுக்காக மூன்று ஐசிசி கோப்பைகளை அவர் வென்று கொடுத்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் வரலாற்றை எழுதினால் அதில் தோனிக்கு தனியிடம் ஒதுக்கப்படும்.

தற்போது அவர் சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டு ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார். தற்போது 43 வயதாகும் அவர் இன்னும் எத்தனை சீசன்கள் விளையாடுவார் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அவர் ஓய்வு பெறுவதற்குள் இளம் அணியை உருவாக்கிவிட வேண்டும் என்ற முயற்சியில் அவர் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சி எஸ் கே அணியில் இடம்பெற்றுள்ள தென்னாப்பிரிக்க அணியின் டிவால்ட் பிரவிஸ் தோனி பற்றி பெருமையாகப் பேசியுள்ளார். அதில் “தோனியைப் பற்றி நான் பிரம்மிப்பாக நினைப்பது அவர் எப்போதும் இளம் வீரர்களுடன் நேரம் செலவிடுவதுதான். தூங்கும் நேரம் தவிர எப்போதுமே அவர் கதவு திறந்தே இருக்கும்” எனக் கூறியுள்ளார்.