1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 7 அக்டோபர் 2023 (18:12 IST)

உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் எய்டன் மார்க்ரம் புதிய சாதனை

Aiden Markram
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. இத்தொடரில் மொத்தம் 10 அணிகள் விளையாடுகின்றனர். இந்த நிலையில், இன்றைய போட்டியில் தென்னாப்பிரிக்கா- இலங்கை அணிகள் இடையே போட்டி நடந்து வருகிறது.

ஸ்ரீலங்கா டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்த  நிலையில் முதலில் சவுத் ஆப்பிரிக்கா பேட்டிங் செய்து வருகிறது.

இதில், ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய பேட்ஸ்மேன்கள், ககாக் 100 ரன்னும்,  டசன் 108 ரன்னும், கிளாசன் 32 ரன்னும், மில்லர் 33 ரன்னும் அடித்தனர்.  ஏய்டன் மார்க்ரம்  வெறும் 49 பந்துகளில் 102 ரன்கள் எடுத்த நிலையில், 106 ரன்னுடன் அவுட்டானர்.

கடந்த 48 ஆண்டு கால உலகக் கோப்பை தொடர வரலாற்றில் அதிவேக சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் எய்டன் மார்க்ரம்.