புதன், 4 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 7 அக்டோபர் 2023 (07:51 IST)

ஷுப்மன் கில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா?- பயிற்சியாளர் டிராவிட் பதில்!

உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி நாளை ஆஸ்திரேலியாவுடன் முதல் போட்டியில் விளையாட உள்ளது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க உள்ளது. இதற்கான இந்திய பிளேயிங் லெவன் அணி இன்னும்  அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் இந்திய அணியின் இளம் வீரரான சுப்மன் கில்லுக்கு டெங்கு காய்ச்சல் உறுதியாகி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கடந்த சில சர்வதேச போட்டிகளில் சுப்மன் கில் சிறப்பாக விளையாடி இருந்தார். அதுவும் முக்கியமாக இந்தியா - ஆஸ்திரேலியா ஒரு நாள் தொடரில் ஷுப்மன் கில் சிறப்பான ஆட்டத்தை அளித்தார். இதனால் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நாளைய போட்டியில் விளையாடுவாரா மாட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதுபற்றி பேசியுள்ள இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் “அவரை மருத்துவக் கண்காணிப்பு குழு கவனித்து வருகிறது. போட்டி தொடங்குவதற்கு சில மணிநேரங்கள் வரை பொறுத்திருந்து பார்ப்போம்” எனக் கூறியுள்ளார். இதனால் அவர் விளையாடுவாரா மாட்டாரா என்பது நாளைதான் உறுதியாகும் என்ற சூழல் உள்ளது.