ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 6 அக்டோபர் 2023 (20:49 IST)

இந்திய ஹாக்கி அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

19 வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கடந்த 24 ஆம் தேதி முதல் சீனாவில் ஹாங்சோ நகரில் நடந்து வருகிறது. ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்துள்ள   நிலையில் பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பதக்கத்தை குவித்து வரும் நிலையில் ஹாக்கி போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் கிடைத்துள்ளது.

இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஜப்பான் ஹாக்கி அணிகள் மோதிய நிலையில் ஜப்பான் அணியை இந்தியா 5 - 1 என்ற கோல் கணக்கில் வென்றது. இந்த வெற்றி மூலம் பாரிஸ் நகரில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது.

இந்த தங்க பதக்கத்தின் சேர்ந்து மொத்தம் இந்தியா 22 தங்க பதக்கங்களை வென்று உள்ளது.

'இந்தி ஹாக்கி அணிக்கு பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில்  , பிரதமர் மோடி ஹாக்கி அணிக்கு பாராட்டு மற்றும் வாழ்த்துகள்  தெரிவித்துள்ளார். அதில், '' ஆசிய விளையாட்டு போட்டியில்  ஹாக்கி அணி தங்கம் வென்றது உற்சாகமளிக்கிறது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணிக்கு வாழ்த்துகள். இவர்கள் அர்ப்பணிப்பு, ஆர்வம்  விளையாட்டில் மட்டுமன்று, இந்தியர்களின் உள்ளத்தை வென்றுள்ளது. இந்த வெற்றி இவர்களின் மன உறுதிக்குச் சான்று'' என்று தெரிவித்துள்ளார்.