புதன், 24 டிசம்பர் 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 7 அக்டோபர் 2023 (11:14 IST)

காவிமயமாக மாறிய இந்திய அணி… புதுக்கலரில் டிரெய்னிங் ஜெர்ஸி!

காவிமயமாக மாறிய இந்திய அணி… புதுக்கலரில் டிரெய்னிங் ஜெர்ஸி!
உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி நாளை ஆஸ்திரேலியாவுடன் முதல் போட்டியில் விளையாட உள்ளது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க உள்ளது. இதற்கான இந்திய பிளேயிங் லெவன் அணி இன்னும்  அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் இந்திய அணி பற்றிய ஒரு விஷயம் தற்போது ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. வழக்கமாக இந்திய அணியின் சீருடை மற்றும் டிரைனிங் ஜெர்ஸி ஆகியவை நீலநிறத்தில் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டு இருக்கும்.

ஆனால் இப்போது புதிதாக காவி நிறத்தில் டிரைனிங் ஜெர்ஸி வழங்கப்பட்டுள்ளது. இதைப் பார்த்து ரசிகர்கள் பலரும் ஸ்விக்கி டெலிவரி பாய்களின் சீருடை போல உள்ளதாக ட்ரோல் செய்து வருகின்றனர்.