நீ விரைவில் குணமடைய பிரார்திக்கிறேன்- விராட் கோலி டுவீட்
பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் உத்தரகாண்ட் அருகே ரூர்க்கி பகுதியில் சாலையில் காரில் சென்றுக் கொண்டிருந்தபோது, தடுப்பு பலகையின் மீது மோதியதில் கார் தீப்பிடித்து எரிந்தது.
இந்த விபத்தில், படுகாயமடைந்த ரிஷப் பண்ட் மற்றும் அவருடன் பயணித்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்தில், ரிஷப் பண்ட்டுக்கு வலது முழங்காலின் தசை நார் கிழிந்து, நெற்றி, வலது மணிக்கட்டு, கணுக்கால் மற்றும் கட்டை விரலில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. முதுகுப் பகுதியில் சிராய்ப்புகள் ஏற்பட்டுள்ளன எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சக வீரருமான விராட் கோலி தன் டுவிட்டர் பக்கத்தில், ''விரைவில் குணமடைவாய்…. நீ குணமடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்'' என்று ஆறுதல் கூறியுள்ளார்.