என்னடா இது இலங்கைக்கு வந்த சோதனை? ஏமாற்றம் அளித்த ஆசிய கோப்பை

Sri Lanka
Last Updated: செவ்வாய், 18 செப்டம்பர் 2018 (15:30 IST)
இலங்கை அணி நேற்று ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்ததையடுத்து ஆசிய கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.

 
6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை தொடர் நடைபெற்று கொண்டிருக்கிறது. முதல் சுற்றில் ஏ,பி பிரிவைச் சேர்ந்த அணிகள் தலா இரண்டு போட்டிகளில் விளையாட வேண்டும். 
 
அதில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அடுத்த சுற்றுக்கு செல்லும். இந்நிலையில் இலங்கை முதல் சுற்றிய ஆடிய இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவியது.
 
தொடரின் முதல் போட்டில் வங்காளதேசம் அணியிடம் படு மோசமான தோல்வியை சந்தித்து. இதையடுத்து நேற்று நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் மோசமான தோல்வியை சந்துள்ளது. 
 
முதல் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 249 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய இலங்கை அணி 158 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்த எளிய ஸ்கோரை கூட சேஸ் செய்ய முடியாமல் இலங்கை பேட்ஸ்மேன்கள் திணறி வருகின்றனர்.
 
இலங்கை அணிக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட வேண்டுமா என்று கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :