புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 17 செப்டம்பர் 2018 (20:58 IST)

மலிங்கா பந்துவீச்சை புஷ்வானமாக்கிய ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்கள்

முதல் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 249 ரன்கள் ஆல் அவுட் ஆனது.

 
ஆசிய கோப்பை தொடரின் மூன்றவது போட்டியில் இன்று இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டி செய்ய முடிவு செய்து களமிறங்கியது.
 
50 ஓவர் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 249 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகப்பட்சமாக ரஹ்மத் ஷா 72 ரன்கள் குவித்தார். முதல் போட்டியில் கலக்கிய மலிங்கா இந்த போட்டியில் ஒரே ஒரு விக்கெட் மட்டும் கைப்பற்றினார்.
 
10 ஓவர்கள் வீசிய மலிங்கா 66 ரன்கள் விட்டுக்கொடுத்தார். மலிங்கா பந்துவீச்சு ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்களிடம் எடுப்படவில்லை. இதைத்தொடர்ந்து இலங்கை 250 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாட உள்ளது.