வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 17 செப்டம்பர் 2018 (16:11 IST)

வங்காளதேசத்திடம் வீழ்ந்த இலங்கை ரஷித் கான் சூழலை தாக்குபிடிக்குமா?

ஆசிய கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் இலங்கை - ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் மோதுகின்றன.

 
ஆசிய கோப்பை தொடரின் முதல் போட்டியில் விளையாடிய இலங்கை அணி வங்காளதேச அணியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இன்று இலங்கை அணி தனது இரண்டாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.
 
மலிங்கா அணிக்கு திரும்பியது இலங்கை அணிக்கு பந்துவீச்சில் பலமாக அமைந்துள்ளது. வங்காளதேச அணிக்கு எதிரான போட்டியில் மலிங்கா அசத்திலாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
 
இருந்தாலும் பேட்டிங்கில் இலங்கை சொதப்பியது. இந்நிலையில் இன்று ஆப்கானிஸ்தான் அணியுடன் மோதுகிறது. ரஷித் கான் உலகின் சிறந்த சுழற்பந்து வீச்சாளராக உருவெடுத்து வருகிறார்.
 
ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய ரஷித கான் உலக கிரிக்கெட் வீரர்கள் அனைவரையும் தனது சூழலில் மிரட்டினார். இலங்கை அணி தற்பொது ரஷித் கான் பந்துவீச்சை எப்படி எதிர்கொள்ள போகிறது என ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.