1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 18 செப்டம்பர் 2018 (12:29 IST)

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி: இந்தியா-ஹாங்காங் அணிகள் இன்று மோதல்

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய தின ஆட்டத்தில் இந்தியா ஹாங்காங் அணியுடன் மோத இருக்கிறது.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் பங்கேற்கும் 14வது ஆசிய கோப்பை 2018 தொடர் கடந்த 15ஆம் தேதி தொடங்கியது. 
 
இந்நிலையில் துபாயில் இன்று நடைபெற இருக்கும் ஆட்டத்தில் இந்தியா-ஹாங்காங் அணிகள் மோதுகின்றன. முந்தைய ஆட்டத்தில் ஹாங்காங் அணி பாகிஸ்தானிடம் படுதோல்வியை சந்தித்தது.
விராத் கோலிக்கு இந்த போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி விளையாட இருக்கிறது.  ரோகித் சர்மா, ஷிகர் தவான், கேதர் ஜாதவ் ஆகியோர் ஃபுல் பார்மில் உள்ளனர். முக்கியமாக தோனியின் அதிரடியை காண பல ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இன்று மாலை 5 மணிக்கு  மேட்ச் தொடங்கவிருக்கிறது.