1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Abinav bindra talked about rishab pant and bcci

பண்ட்டுக்கு உளவியல் சிகிச்சையும் தேவை… விளையாட்டு வீரர் கருத்து!

ரிஷப் பண்ட்
பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் உத்தரகாண்ட் அருகே ரூர்க்கி பகுதியில் சாலையில் சில தினங்களுக்கு முன்னர் காரில் சென்றுக் கொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு கட்டையில் மோதி கார் தீப்பிடித்தது.

படுகாயமடைந்த ரிஷப் பண்ட் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு அபாய கட்டத்தை தாண்டியுள்ளார். இதையடுத்து அவருக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு தலையில், முதுகுப் பகுதியில், கால் முட்டியில் தசை நார் கிழிவு என சில இடங்களில் அடிபட்டுள்ளது. டேராடூன் மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த அவர் மும்பை கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ரிஷப் பண்ட் சிகிச்சைக்கு பிசிசிஐ செய்து வரும் முன்னெடுப்புகளை பாராட்டியுள்ள அபிநவ் பிந்த்ரா “பண்ட்டுக்கு உளவியலாகவும் உறுதுணையாக இருக்கவேண்டும்” எனக் கூறியுள்ளார்.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
இந்தியாவின் செஸ் க்ராண்ட் மாஸ்டரான ப்ரனேஷ்! – தமிழ்நாட்டிற்கு மற்றொரு பெருமை!