1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Sarfaraz khan may do wicket keeping in delhi capitals

ரிஷப் பண்ட்டால் டெல்லி அணியில் நடக்கும் முக்கிய மாற்றம்!

கபில்தேவ்
ரிஷப் பண்ட் சமீபத்தில் கார் விபத்தில் சிக்கியதால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என சொல்லப்படுகிறது.

பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் உத்தரகாண்ட் அருகே ரூர்க்கி பகுதியில் சாலையில் சில தினங்களுக்கு முன்னர் காரில் சென்றுக் கொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு கட்டையில் மோதி கார் தீப்பிடித்தது.

படுகாயமடைந்த ரிஷப் பண்ட் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு அபாய கட்டத்தை தாண்டியுள்ளார். இதையடுத்து அவருக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு தலையில், முதுகுப் பகுதியில், கால் முட்டியில் தசை நார் கிழிவு என சில இடங்களில் அடிபட்டுள்ளது. டேராடூன் மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் பண்ட் அடுத்த கட்ட சிகிச்சைக்காக மும்பைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதனால் அவர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் என சொல்லப்படுகிறது. அதனால் அவருக்கு பதில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் சர்பராஸ் கான் கீப்பராக செயல்படுவார் என சொல்லப்படுகிறது.
 
About Writer
vinoth