1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. 2nd T20 match 207 runs target for India

2வது டி-20 போட்டி: இந்தியாவுக்கு 207 ரன்கள் வெற்றி இலக்கு!

india-srilanka
இன்றைய இரண்டாவது டி-20 போட்டியில், இந்தியாவுக்கு 207 ரன்கள் வெற்றி இலக்காக  நிர்ணயம் செய்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுபயணம் செய்து விளையாடி வருகிறது.
இன்றைய இரண்டாவது T20- போட்டியில்,  ஹர்த்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது.

இலங்கை அணி  முதலில் பேட்டிங் செய்த  நிலையில்,, நிசங்கா, மெண்டிஸ் இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

இதையடுத்து, நிஷங்கா 33 ரன்களும், மென்டிஸ் 52 ரன்களும், அசலங்கா 37 ரன்களும், ஷனகா 56 ரன்களும் அடித்தனர்.

எனவே,20 ஓவர்கள் முடிவியில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்து, இந்தியாவுக்கு 207 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

இந்திய அணியின் உம்ரான் மாலி, 3 விக்கெட்டுகளும், சாஹல் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
57 ரன்களுக்கு 5 விக்கெட்டுக்கள்: இலக்கை நெருங்க திணறும் இந்தியா!