தொடர்புடைய செய்திகள்
- வங்கதேச அணியை வீழ்த்தி டி-20 தொடரை வென்ற இந்திய பெண்கள் அணி!
- மகளிர் ப்ரீமியர் லீக்: டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா அதிரடி முடிவு..!
- பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசமை விட அதிக சம்பளம் பெறும் ஸ்மிருதி மந்தனா
- மகளிர் ஐபிஎல்.. ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்ப்ரீத் சிங் மிகப்பெரிய தொகைக்கு ஏலம்..!
- பங்களாதேஷ் பவுலர்களிடம் பணிந்த இந்தியா பேட்ஸ்மேன்கள்… இலக்கு இவ்வளவுதான்!
இந்திய அணிக்கு எதிரான 3 -வது டி-20 போட்டி... வங்கதேச அணி ஆறுதல் வெற்றி
இந்திய அணிக்கு எதிரான3 வது டி-20 போட்டியில் வங்கதேச அணி ஆறுதல் வெற்றி பெற்றது.
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி வங்கதேசடத்திற்ல் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. அதன்படி, இரு அணிகளுக்கு இடையேயான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டியின் முதல் போட்டியில், இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது.
இதையடுத்து, 11 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில், இந்திய அணி 8 ரன்ககள் வித்தியாசத்தில் வென்று, 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.
இந்த நிலையில் இன்று ( 13 ஆம் தேதி) இரு அணிகளுக்கு இடையேயான 3 வது டி20 போட்டி டாக்காவில் நடைபெற்றது.
இதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷபாலி இறங்கினர். இதில், ஸ்மிருது மந்தனா 1 ரன்னுடன் வெளியேறினார்., கவுர் 40 ரன்னும், அடுத்தடுத்து வந்த வீராஙனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
எனவே 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 102 ரன்கள் எடுத்தது இந்திய அணி.வங்கதேச அணி சார்பில் ரபேயா கான் 3 விக்கெட் வீழ்த்தினார்.
103 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்த வங்கதேச அணியில், தொடக்க ஆட்டக்காரர் ஷமிமா சுல்தானா அணியின் வெற்றிக்கு உதவினார்.
18.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 103ரன்கள் எடுத்து ஆறுதல் வெற்றி பெற்றது. இந்த அணியின் ஷமிமா 42 ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில், மன்னு மணி தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
எனவே வங்கதேச அணி ஆறுதல் வெற்றி பெற்றது. இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.
அடுத்த கட்டுரையில்