வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 5 மார்ச் 2023 (16:28 IST)

மகளிர் ப்ரீமியர் லீக்: டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா அதிரடி முடிவு..!

women ipl1
மகளிர் ப்ரீமியர் லீக்: டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா அதிரடி முடிவு..!
நேற்று முதல் மகளிர் ப்ரீமியர் லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது என்பதும் நேற்று நடந்த முதலாவது போட்டியில் மும்பை மற்றும் குஜராத் அணிகள் மோதிய நிலையில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.
 
இந்த நிலையில் இன்று டெல்லி மற்றும் பெங்களூர் அணி விளையாடி வருகிறது. இந்த போட்டிகள் டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா பவுலிங் தேர்வு செய்துள்ள நிலையில் தற்போது டெல்லி கேப்பிடல் அணியின் பேட்டிங் செய்து வருகிறது. 
 
சற்றுமுன் வரை டெல்லி அணி 12 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 135 ரன்கள் எடுத்துள்ளது என்பதும் வர்மா மற்றும் லேனிங் ஆகிய இருவரும் அபாரமாக அரை சதம் அடித்துள்ளனர் என்பதை குறிப்பிடத்தக்கது. லேனிங் 53 ரன்களும், வெர்மா 77 ரன்களும் அடித்துள்ளனர்.
 
Edited by Siva