வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By SInoj
Last Updated : செவ்வாய், 14 பிப்ரவரி 2023 (16:58 IST)

பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசமை விட அதிக சம்பளம் பெறும் ஸ்மிருதி மந்தனா

babar asam- mandhana
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின்  நட்சத்திர வீரர் பாபர் ஆசமை விட , பெண்கள் ஐபிஎல்- மந்தனா அதிக சம்பளம் வாங்குவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணி முன்னணி அணியாக உள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் ஒவ்வொடு ஆண்டும் நடக்கும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்தாண்டு முதல் இந்தியாவில் பெண்களுக்கான ஐபிஎல் தொடர் நடத்த வேண்டுமென கோரிக்கை எழுந்தது.

அதன்படி, அடுத்த மாதம் முதல்  பெண்கள் பிரீமியர் லீக் நடக்கவுள்ளது.

இத்தொடரில் 5 அணிகள் இடம்பெற்றுள்ளன.  இதற்காக நடந்திய ஏலத்தில், இந்தியாவைச் சேர்ந்த 87 வீராங்கனைகளும், 30 வெளி நாட்டவரும் விளையாட உள்ளனர்.

இவர்களை 5 அணி நிர்வாகமும் ரூ.59 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இதில், இந்திய அணியின் துணைக்கேப்டன் ஸ்மிருது மந்தனாவை பெங்களூர் அணி ரூ.3.40 கோடிக்கு ஏலத்தில் எடுத்ஹுள்ளனர்.

இந்த  நிலையில், பாகிஸ்தான் அணியின் பிரபல வீரர் பாபர் ஆசமை விட ஸ்மிருதி மந்தனா ரூ.90 லட்சம் அதிகம் சம்பளம் வாங்க உள்ளதாக ரசிகர்கள், மீம்ஸ்கள் பதிவிட்டுள்ளனர்