இந்தியாவுக்கு எதிரான 2 வது டெஸ்ட்: வீரர்களை அறிவித்த இங்கிலாந்து!
இந்தியாவுக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் வீரர்களை இங்கிலாந்து இன்று அறிவித்துள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
சமீபத்தில் நடைபெற்ற முதல்வாது டெஸ்ட் போட்டில் இங்கிலாந்து வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது.
இந்த நிலையில், நாளை நடக்கவுள்ள இந்தியாவுக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் வீரர்களை இங்கிலாந்து அறிவித்துள்ளது.
அதில், சுழற்பந்து வீச்சாளார் ஜேக் லீச் காயம் காரணமாக விலகிய நிலையில், அவருக்குப் பதிலலாக சோயப் பஷீர் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் அறிமுகம் வீரராக நாளை களமிறங்குகிறார்.
இங்கிலாந்து அணியில், பென் ஸ்டோக்ஸ்( கேப்டன்), ஜாக் கிராலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட் ஜானி பேர்ஸ்டோவ், பென் போக்ஸ், ரேஹஹான் அகமது, டாம் ஹாட்லி, சோயப் பஷீர், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.