ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 1 பிப்ரவரி 2024 (13:12 IST)

கேப்டன் தோனியுடனான உரையாடலை பகிர்ந்த CSK வீரர் மஹீஸ் தீக்ஷனா !

Maheesh Dikshana -dhoni
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் மஹீஸ் தீக்ஷனா, கேப்டன் தோனியுடனான  உரையாடலை பகிர்ந்துள்ளார்.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும்  நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை காண்பதற்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

இந்த நிலையில் இந்தாண்டுக்காக ஐபிஎல் தொடர் விரைவில் நடக்கவுள்ள நிலையில், சமீபத்தில் ஐபிஎல் ஏலம் நடைபெற்ற நிலையில், 10 அணிகளைச் சேர்ந்த வீரர்களும் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

உலகக் கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் ஐபிஎல் 2024 விரைவில் தொடங்கவுள்ள நிலையில், ஐபிஎல் பற்றிய அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும், ஐபிஎல் அட்டவணை எப்போது ரிலீஸ் ஆகும் என தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் சிஎஸ்கே வீரர் மஹீஸ் தீக்ஷனா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியுடனான  உரையாடலை பகிர்ந்துள்ளார்.

அதில், ஐபிஎல் கோப்பையை வென்ற பிறகு  எங்களுக்கு ஒரு பார்டி இருந்தது. நானும் பத்திரனாவும் இலங்கைக்கு செல்ல இருந்ததால்,அதற்கு முன் தோனியை சந்தித்தோம். அவர் என்னை கட்டியணைத்து அடுத்தமுறை உனக்கு பவுலிங் கிடையாது. பேட்டிங்கும், ஃபீல்டிங்கும் மட்டும்தான் என்று கூறினார் என தெரிவித்துள்ளார்.