ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 24 ஜனவரி 2024 (18:54 IST)

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி அறிவிப்பு!

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான 11 வீரர்களை கொண்ட  இங்கிலாந்து அணியை  இன்று இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு அறிவித்துள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை ஐதராபாத்தில் தொடங்க உள்ளது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் இப்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இங்கிலாந்து அணியில்  இடம்பெற்றுள்ள 11 வீரர்களை கொண்ட அணியை  இன்று இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு அறிவித்துள்ளது.

அதில், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து  அணியில் கிராலி, பென் டக்கேட், ஓலி போப், ஜோ ரூட்,  ஜானி பிரேய்ஸ்டோ, பென் போக்ஸ், ரேகன் அகமது, டாம் ஹார்ட்லி, மார்க் வுட், ஜேல் லீச் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டிகள் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா நிச்சயம் வெல்லும் என  நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.