டி-20 போட்டி: ஸ்ரீலங்காவுக்கு 163 ரன்கள் வெற்றி இலக்கு
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுபயணம் செய்து விளையாடவுள்ளது.
ஷனகா தலைமையிலான இலங்கை அணி இன்றைய முதல் போட்டியில் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது.
இரு அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று, மும்பை வாங்கடே மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்கியது.
கேப்டனாக ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
அதில்,இஷான் கிஷன் 37 ரன்களும், கில் 7 ரன் களும்,சூர்யகுமார் 7 ரன்களும், பாண்ட்யா 29 ரன்களும்,, ஹூடா 41 ரன்களும் அடித்தனர்.
எனவே 20 ஓவர்கள் முடிவில்5 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 162 ரன் கள் அடித்து,இலங்கைக்கு 163 ரன் கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.