1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 31 டிசம்பர் 2022 (23:12 IST)

ஹர்த்திக் பாண்ட்யாவை புகழ்ந்த பிரபல இலங்கை வீரர்!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராகவும் ஆல்ரவுண்டராக ஜொலித்து வருபவர் ஹர்த்திக் பாண்டியா.

வரும் ஜனவரி 3 ஆம் தேதி, இலங்கைக்கு எதிராக நடக்கும் முதல் டி-20 போட்டியில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக பொறுப்பு வகிக்கவுள்ளார்.

அதேபோல், ஒரு  நாள் தொடருக்கு ரோஹித் சர்மார் கேப்டனாகவும், ஹர்திக் பாண்டியா துணைக் கேப்டனாகவும்  நியமிக்கப்பட்டுள்ளனர்.

மூத்த வீரர்களான வீராட், ரோஹித் இருக்கும் போதே ஹர்த்திக் பாண்டியா இந்த அளவு வளர்ச்சியடைந்துள்ளதற்கு ரசிகர்கள் அவரைப் பாராட்டி வருகின்றனர்.

இந்த  நிலையில், இலங்கை அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான சங்ககாரா, ஹர்த்திக் பாண்ட்யாவை புகழ்ந்துள்ளார்.

சக வீரர்களுக்கு புதிய தலைமையின் கீழ் செயல்படுவது சவாலானது. ஹர்த்திக் பாண்டியா எளிதில் இப்புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்டு அணியை வழி நடத்துவர் என்று தெரிவித்துள்ளார்.