ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Abimukatheesh
Last Updated : புதன், 4 அக்டோபர் 2017 (19:39 IST)

அனுஷ்காவிடம் பிடிக்காததை பற்றி ஆமிர்கானிடம் சொன்ன கோலி

நடிகர் ஆமிர்கான் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியிடம் கண்ட பேட்டியில் அனுஷ்கா சர்மாவிடம் தனக்கு பிடிக்காதவற்றை பற்றி பகிர்ந்துள்ளார்.


 

 
மும்பையிலுள்ள ஸ்டுடியோ ஒன்றில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியை பாலிவுட் நடிகர் பேட்டி கண்டார். இந்த நிகழ்ச்சி வரும் தீபாவளி தினத்தன்று தொலைக்காட்சியில் இந்த பேட்டி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
 
இந்த நிகழ்ச்சி குறித்த விவரம் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருவரால் பகிர்ந்து கொள்ளப்பட்டது. விராட் கோலி அனுஷ்கா சர்மாவுடனான உறவு குறித்து பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-
 
அனுஷ்காவின் நேர்மை மற்றும் அக்கறை எனக்கு பிடிக்கும். என்னை மேம்பட்ட மனிதராக மற்றியது அனுஷ்கா சர்மாதான். அனுஷ்காவிடம் எனக்கு வெறுக்க எந்த குணமும் இல்லை. ஆனால் பிடிக்காத குணம் ஒன்றுள்ளது. அவர் எப்போதும் 5 முதல் 7 நிமிடங்கள் தாமதமாகத்தான் வருவார். எங்கள் இருவருக்கும் சிறந்த புரிந்துணர்வு உள்ளது என்றார்.