புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 20 செப்டம்பர் 2017 (12:56 IST)

கோலி பின்னால் தோனி இல்லையாம்; உண்மையை உடைத்த கங்குலி

இந்த ஆண்டு தோனி வெளிப்படுத்தியுள்ள சிறப்பான ஆட்டத்தின் பின்னணியில் உறுதுணையாக இருப்பது விராட் கோலி என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.


 

 
இந்திய கிரிக்கெட் அணியின் சிறப்பான வெளிப்பாடு குறித்து கருத்து தெரிவித்த சவுரவ் கங்குலி கூறியதாவது:-
 
300 போட்டிகளுக்கு மேல் விளையாடி உள்ள தோனி ரன்கள் குவிப்பதில் அனுபவமிக்கவர். தோனி 9 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார். பல போட்டிகளில் இறுதி வரை விளையாடி உள்ளார். தோனி வெளிப்படுத்தி வரும் இந்த அபார ஆட்டத்தின் புகழ் அனைத்தும் விராட் கோலியை சென்றடையும்.  
 
தோனி மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு அணியில் விளையாட வைத்தவர் கோலிதான். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றியில் பாண்டியாவிற்கு முக்கிய பங்குள்ளது. அவர் ஒரு சிறந்த ஆல்ரவுண்டர் என்றார்.
 
சீனியர் வீரர்கள் இளம் வீரர்களுக்கு வழிவிட வேண்டும் என பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தெரிவித்து வந்தனர். அதாவது இந்திய அணியில் தோனி விளையாடுவதை சந்தேகப்படுத்தியது இந்த கருத்துகள். ஆனால் தோனி தற்போது தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கோலியின் நம்பிக்கைதான் தோனியை சிறப்பாக செயல்பட வைத்துள்ளது என கங்குலி கோலியை புகழ்ந்துள்ளார்.