திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 30 செப்டம்பர் 2017 (12:24 IST)

கோலி அணிக்கு தோனி சரிவர மாட்டார்: மீண்டும் தோனிக்கு எதிராக புகையும் சர்ச்சை....

2019 உலக கோப்பை  தொடரில் பங்கேற்கும் தகுதி முழுமையாக தோனிக்கு வரவில்லை என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மோகிந்தர் அமர்நாத் தெரிவித்துள்ளார்.


 
 
தோனியின் வயது மற்றும் பார்ம் குறித்து அவ்வப்போது விமர்சனங்கள் எழுந்த வண்ணமே உள்ளது. தோனி எப்பொழுது ஓய்வு அறிவிப்பார் என்றும் பலர் காத்துக்கொண்டுள்ளனர்.
 
மேலும், அவரது பினிஷிங் திறமை குறைந்துவிட்டதாகவும் கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மோகிந்தர் அமர்நாத் பேசியுள்ளார்.
 
அவர் கூறியதாவது, கோலியின் இளம் அணியில் தோனி இடம் பெறுவது சரியானது அல்ல. கோலி தலைமையிலான அணி திறமை, தகுதி, தன்னம்பிக்கை அனைத்திலும் வித்தியாசமான சிந்தனையுடன் உள்ளது. ஆனால் இதில் தோனி மட்டும் வித்தியாசப்படுகிறார். 
 
அவரது பினிஷிங் திறமையும் தற்போது குறைந்துள்ளது. ஒரு சில போட்டிகளில் மட்டுமே சிறப்பாக செயல்பட்டு வருகிறார். 2019 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் முழு தகுதியும் தோனிக்கு இல்லை என கூறியுள்ளார்.