தொடர்புடைய செய்திகள்
- டெல்லிக்கு செல்லும் முன் பழனிச்சாமியுடன் சந்திப்பு.. நயினர் நாகேந்திரன் மூவ் என்ன?..
- காங்கிரஸ் எம்பிக்களுடன் ராகுல் காந்தி திடீர் ஆலோசனை.. என்ன காரணம்?
- சுதந்திர இந்தியாவில் முதல் வாக்கு திருட்டில் ஈடுபட்டவர் நேருதான்.. அமித்ஷா
- விராத் கோஹ்லி, ரோஹித் சர்மா சம்பளம் ரூ.2 கோடி குறைக்கப்படுகிறதா? பிசிசிஐ முடிவுக்கு என்ன காரணம்?
- புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!
அமைச்சர் கே.என்.நேரு மீது இன்னும் வழக்கு பதியவில்லை: அண்ணாமலை குற்றச்சாட்டு!
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, கோவையில் செய்தியாளர்களை சந்தித்தபோது, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மீதான ஊழல் புகாரில் அமலாக்கத்துறை ஆதாரம் கொடுத்தும் இதுவரை எந்த வழக்கும் பதியப்படவில்லை என்று குற்றம் சாட்டினார். அமலாக்கத்துறை கடிதத்தில், இது கட்சி நிதி தொடர்பானது என சுட்டிக்காட்டப்பட்டும், முதல்வர் மற்றும் அமைச்சர் நேரு தரப்பிலிருந்து நடவடிக்கை இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஒரு தீர்ப்பு வழங்கியதற்காக அவருக்கு எதிராக இம்பீச்மெண்ட் மனு கொடுக்கப்பட்டதை அண்ணாமலை கடுமையாகச் சாடினார். இது, "தீர்ப்பு கொடுத்தால் இப்படி நடக்கும் என நீதிபதிகளுக்கு பயத்தை திமுக கொடுத்துள்ளது" என்று அவர் தெரிவித்தார்.
வாக்காளர் பட்டியலில் இருந்து 77 லட்சம் பேர் நீக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், குறைந்தபட்சம் 80 லட்சம் பேர் நீக்கப்பட வேண்டும் என்றார். கூட்டணி குறித்து, ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன் ஆகியோருடன் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து பொதுவெளியில் பேச முடியாது என்று கூறிய அண்ணாமலை, கூட்டணியில் யார் இணைவது என்பதை அமித்ஷா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முடிவெடுப்பார்கள் என்றார்.
Edited by Siva
