ரஜினிகாந்தின் 'படையப்பா' இன்று ரீரிலீஸ்.. அனைத்து தியேட்டர்களிலும் ஹவுஸ்ஃபுல்..!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமான 'படையப்பா', மீண்டும் திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்பட்டு, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
1999 ஆம் ஆண்டு வெளியான இந்த படம், 26 ஆண்டுகள் கடந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளில் மீண்டும் வெளியானது.
சென்னையிலுள்ள சில திரையரங்குகளில் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
திரையரங்குகளின் உள்ளே, ரஜினிகாந்த் திரையில் அறிமுகமாகும் காட்சியை ரசிகர்கள் விசிலடித்து, கரகோஷம் எழுப்பி ஆரவாரம் செய்த உற்சாக காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இந்தப் படத்திற்கு கிடைத்திருக்கும் அமோக வரவேற்பால், பல திரையரங்குகளில் காட்சிகள் ஹவுஸ்ஃபுல் ஆக நிரம்பியுள்ளன.
Edited by Siva