தொடர்புடைய செய்திகள்
- மதுரையில் முகமூடி அணிந்து நடிகர் சிம்பு சாமி தரிசனம் - வைரலாகும் புகைப்படம்!
- சென்னை சூப்பர் மார்க்கெட்டை அடித்து நொறுக்கிய கும்பல்: பட்டப்பகலில் பரபரப்பு
- அமெரிக்காவுக்கே போதை பொருள் கடத்திய மதுரைக்கார அண்ணாச்சி… கடைசி நேரத்தில் நடந்த திருப்பம்!
- முருகதாஸுக்கு கதை திருடுவதும் பெண்களின் ***** திருடுவதும் பிடிக்கும்! ஸ்ரீரெட்டி சர்ச்சைப் பதிவு!
- சத்துணவு பணியாளர் காலியிடங்கள்; இன்றே கடைசி நாள்! – ஆயிரக்கணக்கில் குவிந்த மக்கள்!
உசிலம்பட்டி சூப்பர் மார்க்கெட்டில் மன்னிப்பு கடிதம் எழுதி வைத்து விட்டு திருட்டு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் சுமார் 65,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் 5,000 ரூபாய் பணத்தை திருடிச் சென்ற நபர் ஒருவர் தான் திருடியதற்காக மன்னிப்புக் கடிதம் ஒன்றை அந்த கடையில் விட்டுச் சென்றுள்ளார்.
"என்னை மன்னித்து விடுங்கள். எனக்கு பசிக்கிறது. உங்களுக்கு இது ஒருநாள் வருவாய்தான். ஆனால் என் குடும்பத்தின் மூன்று மாத வருவாய்க்கு இது சமம். மீண்டும் ஒரு முறை என்னை மன்னித்துவிடுங்கள்," என்று அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.
வியாழக்கிழமை காலை கடையின் உரிமையாளர் ராம்பிரகாஷ் கடையை திறக்க வந்தபோது கடைக்குள் இருந்த இரண்டு கணிப்பொறிகள், ஒரு தொலைகாட்சி மற்றும் 5 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவை களவு போயிருந்தது தெரியவந்தது. கண்காணிப்பு கேமரா காட்சிகள் மற்றும் கடையில் பதிவாகியுள்ள கைரேகைகள் ஆகியவற்றை வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்