திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 8 அக்டோபர் 2020 (13:30 IST)

சென்னை சூப்பர் மார்க்கெட்டை அடித்து நொறுக்கிய கும்பல்: பட்டப்பகலில் பரபரப்பு

சென்னை சூப்பர் மார்க்கெட்டை அடித்து நொறுக்கிய கும்பல்
சென்னையில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் திடீரென 50 பேர் கொண்ட கும்பல் நுழைந்து அந்த கடையை அடித்து நொறுக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சென்னையில் எப்போதும் பிசியாக இயங்கி கொண்டிருக்கும் சாலைகளில் ஒன்று கிரீம்ஸ் சாலை. இந்த சாலையில் கடந்த பல ஆண்டுகளாக சூப்பர் மார்க்கெட் ஒன்று இயங்கி வருகிறது 
இந்த நிலையில் கிரீம்ஸ் சாலையில் உள்ள இந்த சூப்பர் மார்க்கெட்டுக்குள் திடீரென 50க்கும் மேற்பட்டோர் உள்ளே புகுந்து அங்கிருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்களை தாக்கினர்
 
அது மட்டுமன்றி கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் அடித்து நொறுக்கினார். இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட காவல்துறையினர் உடனடியாக வந்து கடையை அடித்து நொறுக்கியவர்களை கைது செய்தனர். இதில் ஒரு சிலர் தப்பி சென்றதாகவும் கூறப்படுகிறது இந்த சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார் 
 
பட்டப்பகலில் சென்னையின் மத்தியில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் திடீரென 50 பேர் கொண்ட கும்பல் அடித்து நொறுக்கிய சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது