1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
  4. Rahul Gandhi questions about Dream India

நமது கனவு இந்தியா இதுதானா? ராகுல்காந்தி கேள்வி!

இந்தியா
உத்தரபிரதேச மாநிலத்தில் சுரங்கங்களில் பணியாற்றும் பழங்குடியினரின் நிலையை குறிப்பிட்டு நமது கனவு இந்தியா இதுதானா? என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். 
 
இந்நிலையில், இந்த சுரங்கங்களில் பணிபுரியும் 15 வயதுக்கும் குறைவான சிறுமிகள், பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக ஊடகங்களில் நேற்று முன்தினம் செய்திகள் வெளியாகின. சுரங்கங்களின் உரிமையாளர்கள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமான பலர், இந்த செயலில் ஈடுபட்டு வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த செய்தியை சுட்டிக்காட்டி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், "சித்ரகூட் பகுதியில் பழங்குடியின சிறுமிகள் அனுபவித்து வரும் வேதனை மிகக் கொடுமையானது. திட்டமிடல் ஏதுமின்றி அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள அந்த சிறுமிகள், தங்கள் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக இத்தகைய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நாம் கனவு கண்ட இந்தியா இதுதானா?" என கேள்வி எழுப்பி உள்ளதாக அந்த செய்தி தெரிவித்துள்ளது.
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
ஆரம்பிக்கிறதுக்குள்ள இத்தனை குறை சொன்னா எப்படி? – அப்செட்டான அமைச்சர் செங்கோட்டையன்!