1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Australia plan to ban chinease apps

விதை போட்ட இந்தியா; தொடரும் டிக்டாக் தடை! அதிர்ச்சியில் சீனா!

World
நாட்டின் தகவல் பாதுகாப்பு காரணமாக இந்தியாவில் டிக்டாக் தடை செய்யப்பட்ட நிலையில் உலக நாடுகள் பல டிக்டாக்கை தடை செய்ய தொடங்கியுள்ளது சீனாவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்தியா – சீனா ராணுவத்தினரிடையே கல்வான் பள்ளத்தாக்கில் மோதல் எழுந்த நிலையில் நாட்டின் தகவல்கள் திருடப்படுவதை தடுக்க 59 சீன செயலிகளை இந்தியா தடை செய்தது. இது உலகளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்தியாவை பின்பற்றி அமெரிக்காவும் சீன செயலிகளை தடை செய்ய திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் மைக் பாம்பியோ அறிவித்த நிலையில், அதிபர் ட்ரம்ப் அதை உறுதி செய்துள்ளார்.

தற்போது டிக்டாக் உள்ளிட்ட சீன செயலிகளை தடை செய்ய ஆஸ்திரேலியாவும் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டிக்டாக் உள்ளிட்ட செயலிகளை தடை செய்ய சொல்லி ஆஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த செயலிகளால் தகவல்கள் திருடப்படலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சீன செயலிகள் சீனாவிற்கு தகவல்களை திருடி அளிப்பதாக பரவி வரும் புகார்களுக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இவை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என சீனா தொடர்ந்து கூறி வருகிறது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
அமமுகவா? அதிமுகவா? சசிகலா முடிவு என்ன? – அமைச்சர் சூசகம்!