கொரோனா மரங்களை தாக்குகிறது என எண்ணப்பட்ட நிலையில் நுண்ணுயிரியால் பல லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் ஆகியுள்ளது.
ஆலிவ் மரங்களை அழிக்கும் ஒரு வகை நுண்ணுயிரியால் 20 பில்லியன் ஈரோக்கள் வரை நஷ்டம் வரலாம் என ஐரோப்பிய ஆய்வாளர்கள்மதிப்பிட்டுள்ளனர். கொரோனா வைரஸால் உலகெங்கும் லட்சக்கணக்கான மக்கள் பலியாகி உள்ளனர் என்றால், ஐரோப்பாவில் குறிப்பாக ஸ்பெயின் மற்றும் கிரீஸில் ஆலிவ் மரங்களை ஒரு வகை பாக்டீரியா தாக்கி உள்ளது.
பூச்சியிலிருந்து பரவிய இந்த பாக்டீரியாவால் ஆலிவ் மரங்கள் மட்டும் அல்ல, செர்ரி மற்றும் ப்ளம்ஸ் மரங்களும் பாதிக்கப்படும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இதுவரை இதற்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.