நிவாரண பொருட்கள் வழங்கலாமா? கூடாதா? – நாளை தீர்ப்பு!

high court
Prasanth Karthick| Last Modified புதன், 15 ஏப்ரல் 2020 (12:19 IST)
தன்னார்வலர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் நிவாரண உதவிகள் வழங்குவதற்கு அரசு தடை விதித்தது தொடர்பான வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாக உள்ளது.

தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வலர்கள் நிவாரண உதவிகளை வழங்கி வந்தனர். இவ்வாறு நிவாரண உதவிகள் வழங்குவதில் சமூக இடைவெளி சரியாக கடைபிடிக்கப்படுவதில்லை என தன்னிச்சையாக நிவாரண உதவிகள் வழங்க தடை விதித்தது தமிழக அரசு. மாவட்ட நிர்வாகங்களுடன் இணைந்து செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதை எதிர்த்து திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் மீதான விசாரணைக்கு பிறகு நாளை தீர்ப்பு வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :