தொடர்புடைய செய்திகள்
- காத்திரு பகையே..! நாங்கள் உங்களை வேட்டையாடுவோம்!? – ஜோ பைடன் ஆரூடம்!
- அமெரிக்கா தொடங்கும் போர்கள் சரியான முடிவை தருவதில்லை - ஏன் தெரியுமா?
- கிரிக்கெட்டிற்கு தாலிபன்கள் அனுமதி?
- பிணத்தை ஹெலிகாப்டரில் தொங்கவிட்டு நகர் உலா! – தாலிபான்கள் அட்டூழியம்!
- ஆப்கானிஸ்தானுக்கு டாட்டா காட்டிய அமெரிக்கா! – கடைசி வீரரின் புகைப்படம் வைரல்!
ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியதில் தவறில்லை: பைடன்
ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளைத் திரும்பப் பெறும் தனது முடிவு சரியானதே என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மீண்டும் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து வைத்திருப்பது சரியாக இருக்காது என்றும் அவர் கூறினார். ஆப்கானிஸ்தானில் போர் முடிந்த பிறகு நாட்டு மக்களுக்கு அவர் உரையாற்றினார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து 1.2 லட்சம் பேரை விமானம் மூலம் மீட்ட படையினரை அவர் பாராட்டினார். இதனிடையே ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிகழ்வை தாலிபன்கள் கொண்டாடி வருகின்றனர்.
2001-ஆம் ஆண்டு அமெரிக்காவில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் அமெரிக்கக் கூட்டுப் படைகள் போரைத் தொடங்கின. தாலிபன்களின் ஆட்சி அகற்றப்பட்டது.
ஆயினும் 20 ஆண்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் படைகளை விலக்கிக் கொண்ட பைடனின் முடிவு உள்நாட்டிலும் நட்பு நாடுகள் மத்தியிலும் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. படைகளை விலக்குவது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டதும் தாலிபன்கள் மிக வேகமாக முன்னேறி அதிகாரத்தைக் கைப்பற்றினர்.
அடுத்த கட்டுரையில்