புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (15:57 IST)

பிணத்தை ஹெலிகாப்டரில் தொங்கவிட்டு நகர் உலா! – தாலிபான்கள் அட்டூழியம்!

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில் தாலிபான்கள் செய்த அட்டூழிய சம்பவத்தின் வீடியோ வைரலாகி வருகிறது.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கிய நிலையில் தாலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றினர். இந்நிலையில் இந்த மாத இறுதிக்குள் அமெரிக்க படைகள் முழுவதுமாக ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும் என அமெரிக்கா தெரிவித்திருந்தது.

அதன்படி நேற்றோடு அப்கானிஸ்தானில் இருந்த மொத்த அமெரிக்க படைகளும் திரும்ப பெறப்பட்டுள்ளன. நேற்று கடைசி பேட்ஜ் அமெரிக்க வீரர்களும் ஆப்கானிஸ்தானிலிருந்து புறப்பட்டனர்.

இந்நிலையில் தற்போது தாலிபான்கள் குறித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் ஒரு நபரை கொன்று அமெரிக்க ஹெலிகாப்டரில் கட்டி தாலிபான்கள் கந்தகார் பக்கமாக உலா வருகின்றனர். இந்த வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.