செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (10:05 IST)

நரேந்திர மோதி - கமலா ஹாரிஸ் முதல் முறையாகச் சந்திப்பு

அமெரிக்கா சென்றிருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, அந்நாட்டின் துணை அதிபர் கமலா ஹாரிஸை முதல் முறையாக நேரில் சந்தித்துப் பேசினார்.

அமெரிக்க வரலாற்றில் துணை அதிபரான முதல் பெண் என்ற பெருமையைப் பெற்ற கமலா ஹாரிஸ், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.
 
வாஷிங்டனின் நடந்த இந்தச் சந்திப்பின்போது துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டதற்கு நரேந்திர மோதி வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்தியாவுக்கு வர வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
 
"உங்களை வரவேற்பதற்காக இந்திய மக்கள் காத்திருக்கிறார்கள்" என்று மோதி அவரிடம் கூறினார்.
 
மோதியின் மூன்று நாள் அமெரிக்கப் பயணம் இன்றுடன் நிறைவடைகிறது. அதிபர் ஜோ பைடனை முதல் முறையாக அவர் சந்தித்துப் பேசுகிறார்.