செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (08:29 IST)

உங்கள பாக்க மக்கள் ஆவலா இருக்காங்க.. இந்தியா வாங்க! – கமலா ஹாரிசை அழைத்த பிரதமர் மோடி!

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு துணை அதிபர் கமலா ஹாரிசை சந்தித்து இந்தியா வர அழைப்பு விடுத்துள்ளார்.

அமெரிக்காவில் நடைபெறும் குவாட் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதர் மோடி 4 நாட்கள் சுற்று பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அவர் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் மற்றும் ஜப்பான் பிரதமர் யோஷிடே சுகா ஆகியோரை சந்தித்து இரு நாட்டு உறவு நிலை குறித்து பேசினார்.

பின்னர் கமலா ஹாரிசை சந்தித்த அவர், கமலா ஹாரிசை காண இந்திய மக்கள் மிகவும் ஆவலாக இருப்பதால் அவர் இந்தியாவிற்கு வரவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். கமலாஹாரிஸ் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.