வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: திங்கள், 23 ஏப்ரல் 2018 (13:23 IST)

நாளிதழ்களில் இன்று: முதல்வரா? எதிர்க்கட்சி தலைவரா? - ரசிகர்களுக்கு கமல் ஹாசன் பதில்

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன், யூ-டியூப் மூலம் நேரலையில் பொதுமக்களின் கேள்விகளுக்கு நேற்று பதிலளித்தார். அப்போது, சமூக  குறைபாடுகளை அரசுக்கு தெரியப்படுத்தும் விதமாக விரைவில் 'மய்யம் விசில் ஆஃப்' (செல்போன் செயலி) அறிமுகப்படுத்தப்படும் என்று கமல் அறிவித்துள்ளார். 

மேலும், அடுத்த தேர்தலில் தான் முதல்வராக இருப்பேனா அல்லது எதிர்க்கட்சித் தலைவராக இருப்பேனா என்று மக்கள் கேட்பதாகவும், ஆனால், அதை  மக்கள்தான் முடிவு செய்யவேண்டுமென்றும் நேரலையில் பேசிய கமல் ஹாசன் கூறியதாக ’தி இந்து’ தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.
கத்துவா சம்பவத்தில் பாஜகவின் நிலைப்பாடுதான் என்ன? என்ற தலைப்பில் இன்று தலையங்கம் வெளியிட்டுள்ளது ’தி இந்து’ தமிழ். "காஷ்மீர் மாநிலம்  கத்துவாவில் எட்டு வயது சிறுமி பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக இரட்டை நாக்குடன் பேசிவருகிறது பாஜக.  இவ்விவகாரத்தில் ஜம்மு பகுதியில் பாஜக காட்டும் முகமும் தேச மக்களுக்குக் காட்டும் முகமும் ஒன்றுக்கொன்று முரணானவை. பிரதமர் என்பதைத் தாண்டி  பாஜக கூட்டணி ஆளும் மாநிலம் என்ற வகையிலும் கூடுதல் பொறுப்பு இந்த விஷயத்தில் மோடிக்கு இருக்கிறது. நடவடிக்கைகளை சொந்தக் கட்சியிலிருந்து  அவர் தொடங்க வேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.